பொன்மகள் வந்தாள் நெட்டில் வெளியானதால் திரையரங்கு உரிமையாளர்கள் குஷி
1 min read
30/5/2020
தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டு வருவது மிக நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் படத்தின் வெற்றியை பற்றி தான். தியேட்டரில் வெளியாகும் படங்களை போலவே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இந்த படத்துக்கு.
ஆனால் அதே நேரத்தில் படம் வெளியாவதற்கு சில நேரத்திற்கு முன்னரே பைரசி தளங்களில் ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படம் வெளியிடப்பட்டது. இதனால் குறித்த நேரத்திற்கு முன்னரே அமேசான் நிறுவனம் பொன்மகள்வந்தாள் படத்தை வெளியிட்டது.
பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்து வருகிறது. இருந்தாலும் படம் நெட்டில் வெளியானதால் பல திரையரங்கு உரிமையாளர்கள் செம குஷியில் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் பொன்மகள் வந்தாள் படத்தை OTT தளத்தில் வெளியிடுவதற்கு பெரிய எதிர்ப்பை வெளியிட்டனர். அதுமட்டுமில்லாமல் சூர்யா மற்றும் அவரது உறவினர்கள் தயாரிக்கும் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிடப் போவதில்லை எனும் அளவுக்கு கோபத்தின் உச்சிக்கே சென்றனர்.
ஆனால் அதையெல்லாம் மீறி சூர்யா படத்தை அமேசன் பிரைமில் வெளியிட்டார். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் நெட்டில் வெளியானது படக்குழுவினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
என்னதான் பெரிய விலைக்கு அமேசானுக்கு விற்றாலும் அரசு இணையதளங்களில் படங்கள் வெளிவந்தால் அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்பதும் தெரிந்த விஷயம் தான். இதனால் அடுத்தடுத்து படங்களை வெளியிட பலரும் யோசித்து வருகின்றனர். அதுவும் எச்டி பிரிண்டில் வெளியானால் பயம் இருக்கத்தான் செய்யும்.