மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 3007 பேருக்கு கொரோனா
1 min read
3007 coroners in Maharashtra one day
7-5-2020
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 3007 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
மராட்டிய மாநிலம்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாநிலம் மராட்டியம். அந்த மாநிலத்திலும் மும்பையில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 3007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது.
91 பேர் சாவு
மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 91 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,060 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாநிலத்தில் கொரோனாவிலிருந்து இன்று மட்டும் 1,924 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,314 ஆகும். தற்போது 43,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தின் தலைநகர் மும்பையில் இன்று புதிதாக 1,420 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,774 ஆக உயர்ந்தது.