டோனி வேடத்தில் நடித்த நடிகர் தற்கொலை
1 min read
Actor Sushant commits suicide Who plays the role of Tony
14-6-2020
பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியாக நடித்த நடிகர் தற்கொலை செய்தார்.
டோனி வேடத்தில் நடித்தவர்
பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.டோனி என்ற பெயரில் சினிமா பட்டம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் டோனியாக நடித்தவர் சுஷாந்த்(வயது 34).
இவர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். என்ஜினயரிங் படித்தவர். தொடக்கத்தில் டான்சராக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் டிவி தொடர்களில் நடித்தார். “கை போ சே” என்ற படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்தார். அமீர்கானின் பி.கே படத்திலும் நடித்தார். அதன்பின்னர்தான் டோனி வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். மேலும் ராப்டா, கேதர்நாத் போன்ற படங்களிலும் நடித்தார்.
தற்கொலை
சுஷாந்த் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது இந்தியா முழுவதும் குறிப்பாக சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுஷாந்தின் முன்னாள் மேலாளர் திஷா ஷேலியன் என்ற பெண் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் சுஷாந்த் இருந்துவந்தார். அதிக மன அழுத்தத்திலும் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணை

சுசாந்திடம் மேனேஜராக இருந்த பெண் திஷா இவரிடம் மட்டுமின்றி பல பாலிவுட் பிரபலங்களுக்கும் மேனேஜராக இருந்தவர்
இவர் கடந்த 8-ந் தேதி. தான் தங்கியிருந்த 14-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து திடீரென கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையால் பல பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திஷா தற்கொலை செய்து கொண்ட ஒரே வாரத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதால் இரண்டு தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.