பொன்னியின் செல்வன் படத்தை அமலாபால் நிராகரித்தது ஏன்?
1 min read
அமலாபால்
Why did Amala Pal reject Ponni Selvan’s film?
12.9.2022
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பொன்னியின் செல்வன் இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நான் நிராகரித்தேன் என்று அமலாபால் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன். பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமானவை. சரியானது. அது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அமலாபால் கூறினார்