விஜய்யுடன் மீண்டும் யோகி பாபு
1 min readYogi Babu again with Vijay
12.9.2022
நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், விஜய்யுடன் யோகிபாபு இணையும் 6-வது படமாக ‘தளபதி 67’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.