“நானே வருவேன்”-தனுஷ் படத்தின் டீசர் 15-ந்தேதி வெளியீடு
1 min read“Nane Varavane”-Dhanush Movie Teaser 15th Release
13.9.2022
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தின் டீசர் 15-ந் தேதி வெளியாகிறது.
நானே வருவேன்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நானே வருவேன் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளத்தில், “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி ‘நானே வருவேன்’ செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீசர் வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.