June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா- 49 பேர் சாவு

1 min read

In Tamil nadu 2141 person affected for Corona one day- Death 49

18-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்று மட்டும் 49 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

2.141 பேருக்கு கொரோனா

தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை கொரோனா பரவல் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 37,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று திருவள்ளூரில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் வேலூரில் தலா 55 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்டம் வாரியாக..

இன்று கொரோனா கண்டறியபபட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-

சென்னை 1373
அரியலூர்-3
செங்கல்பட்டு 115
திருவள்ளூர் 123
காஞ்சிபுரம் 55
திருநெல்வேலி 19
தென்காசி 33
தூத்துக்குடி 26
கன்னியாகுமரி 10
கோவை 23
கடலூர் 17
தர்மபுரி 2
மதுரை 9
விருதுநகர் 13
திண்டுக்கல் 2
தேனி 6
தஞ்சாவூர் 21
ஈரோடு 3
கள்ளக்குறிச்சி 3
கரூர் 3
நாகப்பட்டினம் 9
நீலகிரி 4
புதுக்கோட்டை 6
ராமநாதபுரம் 28
சிவகங்கை 15
ராணிப்பேட்டை 18
சேலம்14

திருப்பத்தூர் 4
திருவண்ணாமலை 27
திருவாரூர் 8
திருப்பூர் 4
திருச்சி 14
வேலூர் 55
விழுப்புரம் 26

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *