ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு ரசிகர்கள் உதவி
1 min read
Rajini’s Fans help to boy who Bomb threat
20-6-2020
ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு ரஜினி ரசிகர்கள் உதவி செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. உடனே போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினியின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதால் இது வதந்தி என்பது உறுதியானது.
சிறுவன்
இதனையடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் கடலூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. 8 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தன்னுடைய தந்தையின் மொபைல் போனை எடுத்து ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனை எச்சரித்துவிட்டு அவருடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு சிறுவனை விடுவித்தனர்.
உதவி
இந்த நிலையில் கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினர், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று நிவாரண உதவி செய்ததோடு சிறுவனின் தாய்க்கு ஆறுதல் கூறினார்கள்.