May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

பட வாய்ப்புக்காக பிரபல நடிகரை டார்ச்சர் பண்ணும் நடிகை

1 min read

26.6.2020

Torture actress who plays actor for film opportunity

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டு நடிப்பில் கலக்கி வருபவர் தான் அந்த நடிகர். ஆரம்ப காலத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு ஆளானார். சமீபகாலமாகத்தான் அவரது படங்கள் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன.

அவருக்கு பக்கபலமாக இரண்டு இயக்குனர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரின் கையை பிடித்துக்கொண்டு தற்போது பேமஸான நடிகராக வலம் வருகிறார்.

அந்த நடிகரின் முதல் படத்தில் பள்ளி மாணவியாக ஜோடியாக நடித்தவர் தான் அந்த நடிகை. ஒரு மாதிரியான படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு அந்த நடிகை சில படங்களில் நடித்தபோதும் பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

உள்ளேயே ஒரு நடிகருடன் காதல் சர்ச்சையும் வந்தது. இருந்தாலும் தற்போது தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அதற்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் வராததால் கவலையில் இருக்கிறாராம்.

இந்த சமயத்தில் தான் அந்த முதல் பட நடிகருக்கு போன் பண்ணி பட வாய்ப்பு தருமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த நடிகரோ தற்போது உலகமே அறியும் அளவுக்கு புகழ் பெற்று இருக்கிறார்.

அதுவுமில்லாமல் அவர் வாக்கப்பட்டு சென்ற இடம் பெரிய இடம். இதனால் மார்க்கெட்டே இல்லாத ஒரு நடிகையுடன் நடித்தால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என அந்த நடிகையை கழற்றி விட்டு விட்டாராம்.

இதனால் நம்பிய ஒரு நடிகரும் கைவிட்டதால் தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறாராம். இருந்த போதும் தனது நண்பர்கள் தெரிந்த இயக்குனர்கள் என போன் பண்ணி வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.