சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது- 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு
1 min read
Father and son murder case-SI Ragu ganesh arrested
1-7-2020
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கில் 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தை – மகன்
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் மரணம் அடைந்தனர். ஆனால் போலீசார் அடித்ததில்தான் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதுபற்றி தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கை ஐகோர்ட்டு தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஐகோாட்டு உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் கைது
ஐகோர்ட்டு உத்தரவுபடி இன்று(புதன்கிழமை) சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் சி.பி.சி.ஐ.டி. கொலைவழக்காக பதிவு செய்தது. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு. 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது.