May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் பயன்படுத்திய காரின் மர்மம்

1 min read

Sathankulam case- arrested Inspecter’s car- whome

4-7-2020

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார்பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

தந்தை-மகன் கொல

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாக எடுத்து விசாரித்தது. பின்னர் இதுபற்றி உனடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டது.

சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணை நடத்தி
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த போலீஸ் ஏட்டு முத்துராஜ்நேற்று முன்தினம் இரவில் விளாத்திகுளம் அருகே பூசனுாரில் கைது செய்யப்பட்டார். இரவில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின் நேற்று காலையில் முத்துராஜை துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். அதன்பிறகு சி.ஜே.எம்.,கோர்ட் மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் நண்பர்கள்

விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.,சங்கர் கூறியதாவது:-
இந்த வழக்கில் தேவையான தடயங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. சி.சி.டி.வி.,காணொளி பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள். சாத்தான்குளம் ஸ்டேஷனில் சம்பவத்தன்று இருந்த போலீஸ் நண்பர்கள் குழுவையும் விசாரிப்போம். மேலும் தகவல்களுக்காக தற்போது சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்துபேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை சிறைக்கு மாற்றம்:

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் முடிவெடுத்ததால் நேற்று ஐந்துபேரும் மதுரை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

சர்சைக்குரிய கார்:

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு காரில் செல்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் அந்த காரை மடக்கி அவரை கைது செய்தனர். தற்போது அந்த கார் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. டிஎன் 10 ஏஎச் 2304 என்ற ஷிப்ட் கார், சென்னை முகப்பேரை சேர்ந்த சுரேஷ்குமா் என்பவருக்கு சொந்தமானது.

அவர் திருநெல்வேலியை சேர்ந்த கந்துவட்டி நபரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகுவைத்துள்ளார். ஆனால் மீட்கவில்லைகாரை வாங்கியவர், கந்துவட்டி வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ளார். எனவே காரை தற்போது வைத்திருப்பவர், இன்ஸ்பெக்டருக்கு உறவினரா என்பன போன்ற விபரங்களையும் போலீசார் சேகரித்தனர். கார் தற்போது கங்கைகொண்டான் போலீிஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.