May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

நாளைமுதல் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

1 min read
Be more mindful of tomorrow; Health Secretary Radhakrishnan

5-7-2020
.கொரோனா விவகாரத்தில் நாளை முதல் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்..

கொரோனா பரவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தாலும் வந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் ( ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. மதுரையில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை போரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காலத்திலும் பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.கொரோனா விசயத்தில் மக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் இருந்துவிடக் கூடாது.

கூடுதல் கவனம்

நாளை (திங்கட்கிழமை) முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள 39,590 தெருக்களில் தொற்று பாதித்த தெருக்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்துள்ளது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் 26 பேர் சாவு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 26 பேர் இறந்துள்ளனர். இவர்களில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 5 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 26 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் இதுவரை 66,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 1,033 பேர் இறந்துள்ளனர். தற்போது 24,195 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதித்தவர்களில் 58.63 சதவீதம் ஆண்களும், 41.37 சதவீதம் பெண்களும் உள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 சதவீதம் பேர்.
10 முதல் 19 வயது வரையுள்ளவர்கள் 6.90 சதவீதம் பேர்.
20 முதல் 29 வயது உடையவர்கள் 18.34 சதவீதம் பேர்.
30 முதல் 39 வயது உடையவர்கள் 18.71 சதவீதம் பேர்.
40 முதல் 49 வயதுக்குள்ளானவர்கள் 18.75 சதவீதம் பேர்.
50 முதல் 59 வயதுக்குள்ளானவர்கள் 16.62 சதவீதம் பேர்.
60 முதல் 69 வயது உடையவர்கள்- 10.55 சதவீதமும். 70 முதல் 79 வயது உடையவர்கள் 5.35 சதவீதமும்,
80 வயதுக்கு மேல் 1.79 சதவீதமும் உள்ளனர்.

ராயபுரம்

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி ராயபுரம் மண்டலம். அதேபோல் அதிகமாக குணமடைந்தோர் விகிதத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மண்டலத்தில் 72 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் தலா 68 சதவீதமும், அண்ணாநகரில் 66 சதவீதமும் குணமடைந்துள்ளனர். மிகக்குறைவான விகிதம் (45 சதவீதம்) உடைய மண்டலங்களாக ஆலந்தூர் உள்ளது.

இறப்பு விகிதம்

கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதத்தில் மிகக்குறைவான மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 0.56 சதவீதம் இறப்பு பதிவாகியுள்ளது. வளசரவாக்கம் 1.02 சதவீதமும், மாதவரம் 1.06 சதவீதமும், ஆலந்தூர் 1.12 சதவீதமும், அம்பத்தூர் 1.15 சதவீதமும், மணலி 1.20 சதவீதமும் இறப்பாக உள்ளன. திருவொற்றியூர் மண்டலமானது அதிக பட்சமாக இறப்பு விகிதம் 2.27 கொண்ட மண்டலமாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.