May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மாணவர்களுக்கு உதவும் டிஜிட்டல் நூலகம்; நலரை கோடி புத்தகங்களை படிக்கலாம்

1 min read
A digital library to help students

13-7-2020

கொரோனா ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் நூலகம் மாணவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கிறது. அவர்களுக்காக 4 கோடியே 60 லட்சம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் நூலகம்

தற்போது புத்தகங்கள் பயன்பாட்டைவிட இணையதள பயன்பாடுகள்தான் அதிகம் உள்ளன. இணைய தளத்தில் பாடப்புத்தங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரையில் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் பாடம் படிக்க தொடங்கி விட்டார்கள்.

ஏற்கனவே நூலகங்களில் உள்ள புத்தகங்கள் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆன்-லைன் பாடத்திற்கு டிஜிட்டல் நூலகம் மாணவ-மாணவிகளுக்கு பெரிதும் உதவுகிறது.

4.60 கோடி புத்தகங்கள்

மாணவர்களுக்கு உதவுவதற்காகவே, மத்திய அரசு, ஒரு நூலகத்தை தயார் செய்துள்ளது. இதில், ஆரம்ப பாடம் முதல் சட்டம், மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து பாட புத்தகங்கள், ஒரே இணையத்தில் கிடைக்கின்றன.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்த,
இந்த தேசிய டிஜிட்டல் நூலகத்தில், 4.60 கோடி புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன.

இந்த தேசிய, ‘டிஜிட்டல்’ நூலகத்தில், பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநில மாணவர்களும், தங்கள் மொழியில் புத்தகங்களை படிக்கலாம். இப்போதைய சூழலில், ஆன்லைனில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பத்திரிகைகளை கண்டுபிடித்து படிக்க முடிகிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு, இங்கு நல்ல ஆய்வு கட்டுரைகள் கிடைக்கின்றன.
இந்த டிஜிட்டல் நூலகத்தை , http://ndl.iitkgp.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.