May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கதறி அழுத அமலாபால் -வீடியோ வெளியிட்டார்

1 min read

13.7.2020

Amalapaul released the video crying

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு விஜய் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அமலாபாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் முன்மாதிரி ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் ஆடையில்லாமல் கூட நடித்து பார்த்துவிட்டார். இருந்தாலும் ரசிகர்கள் மயங்க வாய்ப்பு இல்லை போல.

சமீபகாலமாக அமலா பாலின் நட்பு வட்டாரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இரவு பார்ட்டி, ஆண் நண்பர்கள் பழக்கம் என தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் நடிகர் தனுஷ் தான் அமலாபால் விவாகரத்துக்கு காரணம் என கூட செய்திகள் பரவியது.

இந்நிலையில் பிரபல பாடகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார் அமலா பால். திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி கதறி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், ஏன், அந்த பாடகரும் கழட்டி விட்டு விட்டாரா என கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் அமலாபால் வெங்காயம் நறுக்கும் போது கண்களில் தண்ணீர் வருவதாகவும், இதற்கு வேற வழியே இல்லையா என்பதைப் போலவும் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அமலாபால் வாழ்க்கையில் மறுபடியும் ஏதாவது கிசுகிசு சமாச்சாரமா என விறுவிறுப்பாக சென்று பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்காகவே ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.