May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பயங்கரவாதத்திற்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டார்; என்.ஐ.ஏ. தகவல்

1 min read

சொப்னா சுரேஷ்

Swapna was involved in gold smuggling for terrorism; NIA Information

13-7-2020

ஸ்வப்னா தரப்பினர் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

தங்கம் கடத்தல்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய 4 பேர் மீது பயங்கரவாததுக்கு நிதி திரட்டல், பயங்கரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், பயங்கரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்வப்னாசுரேஷ்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கடத்தல் பற்றிய முக்கிய தகவல்களை தெரிதுள்ளன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

பயங்கரவாதங்களுக்கு

கைது செய்யப்பட்ட ஸ்வப்னா தரப்பினர் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடத்தல் தங்கம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதே தவிர நகை செய்ய அல்ல.

இந்த குற்றத்தில் ஈடுபட ஏதுவாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் போலியாக முத்திரைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் இதேபோன்று 2019 ஆம் ஆண்டு இரண்டு முறை தங்க கடத்திலில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருமுறை 18 கிலோ, மற்றொரு முறை 9 கிலோ என மொத்தம் 27 கிலோ எடையிலான தங்கம் கடத்தியுள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

7 நாட்கள்

இதையடுத்து அவர்கள் இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.