June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தராவியில் மீண்டும் கொரோனா

1 min read
The corona spreads back at dharave

17-7-2020

மும்பை தாராவியில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது.

தாராவி

இந்தியாவில் கொரோனா தாக்கத்தில் முதன்மையாக விளங்கும் மாநிலம் மராட்டியம். அந்த, மாநிலத்தில் மும்பை, தாராவி, நாக்பூர் மற்றும் நவிமும்பை ஆகிய பகுதிகளில் அதிகாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் குடிசை பகுதிகள் அதிகமுள்ள இடமாகவும் விளங்குவது தாராவி, இங்கு கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. ஒருக்கட்டத்தில் கொரோனா மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது முதல் மந்திரி பாராட்டினார். மேலும் தாராவியில் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதற்கு இதற்கு முன்பு இரண்டு முறை உலக சுகாதாரதுறை பாராட்டு தெரிவித்துள்ளது  ஆனால் பின்னர் அதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

தாராவியில் ஒரே நாளில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,438 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் தற்போது வரை 2,087 பேர் குணமடைந்துள்ளனர். 102 பேர் சிகிச்சையில் உள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *