நடிகை லட்சுமி மேனன் கீழே விழுந்தார்
1 min read
Actress Lakshmi Menon fell down
18-7-2020
நடிகை லட்சுமி மேனன் பரதம் ஆடும்போது கீழே விழுந்தார்.
லட்சுமி மேனன்
‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அதன்பின் அவர் பாண்டியநாடு, சுந்தர பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் என பல படங்களில் நடித்தார்.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கீழே விழுந்தார்
தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும்நடக்கவில்லை. இதனால் நடிகைகள் பலர் தங்கள் படங்கள், வீடியோக்களை வலைதளங்களில் பதிவிட்டு தங்களை ரசிகர்களிடம் அடையாளம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.