October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

கந்த சஷ்டி கவசம் அரகேற்றம் நடந்த கோவில் அர்ச்சகர்கள் போலீசில் புகார்

1 min read
Chennimalai temple priests complaint  police over Karupar Kottam

19-7-2020

கந்தசஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதற்கு அந்த கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த கோவில் அர்ச்சகர்கள் போலீசில் புகார் செய்தனர்.

கந்த சஷ்டி கவசனம் அவமதிப்பு

இந்துக்களில் பலர் கந்த சஷ்டி கவசத்தை உச்சரிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். பலர் காலையில் டெலிவிஷன், ரேடியோவில் அந்த கவசத்தை கேட்பார்கள். உடல்நலனை பேணி காப்பதற்கு சொல்லும் மந்திர சொல்லாக அந்தக் கந்த சஷ்டி கவசம் போற்றப்படுகிறது.

அப்படி புனிதமாக கருதும் கந்தசஷ்டி கவசத்தை ‛கறுப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர் அவமதித்து கொச்சைப்படுத்தி, ‘யூ-டியூப்பில் வெளியிட்டனர். இது பக்தர்களிடம் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பலர் இணைய தளம் மூலமாக கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தர், செந்தில்வாசன் உட்பட சிலரை கைது செய்தனர். செனனை தி.நகரில் உள்ள அவர்களது அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

கண்டனம்

கறுப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்துார், சுவாமிமலை என சில கோவில்களில் கந்த சஷ்டி கவசத்தை கோவில், வீதிகளில் கூட்டமாக உச்சரித்து முருகனை வழிபட்டனர்.

அரங்கேற்றம் நடந்த இடம்

கடந்த சஷ்டி கவசத்தை இயற்சியது ஸ்ரீபாலன் தேவராயன். இவர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்தான் கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்தார். கந்த சஷ்டி கவசம அவமதிப்பு செய்யப்பட்டதற்கு அந்த கோவில் அர்ச்சகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அங்கு, அர்ச்சகர்கள், வணிகர்கள், பல்வேறு ஆன்மிக அமைப்பினர், பொது அமைப்பினர் சேர்ந்து ஊர்வலமாக சென்று, போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரி, கறுப்பர் கூட்டம் மீது நடவடிக்கை கோரியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் இறை நம்பிக்கை உள்ள நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் போன்றோர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.