நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது
1 min read
20.7.2020
Corona damage in Nellai, Tenkasi and Thoothukudi has crossed 7,000நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி மருத்துவமனைகளில் 1380 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறை பட்டியலின்படி நெல்லை மாவட்டத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோல் தென்காசி மாவட்டத்தில் தற்போது 678 பேர் சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 415 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1096 ஆக உள்ளது. இது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 151 பேருக்கு தொற்று பரவியது. இந்த மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
3 மாவட்டங்களிலும் சேர்த்து நேற்று கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது. 3 மாவட்டத்திலும் இதுவரை 3220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.