May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் ரஜினிக்கு ரூ.100 அபராதம்

1 min read
Rajini fined Rs 100 for driving without seat belt

24-7-2020
‘சீட் பெல்ட்’ அணியாமல் ரஜினிகாந்த் கார் ஓட்டியதால் அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ரஜினி கார் ஓட்டினார்

நடிகர் ரஜினிகாந்து முகக்கசவம் அணிந்தபடி காரை ஓட்டிச் சென்ற படம் வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுபற்றி விசாரித்த போது, அவர் சென்னை போயஸ் கார்டனில் இருந்து கோளம் பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் அவர் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் சென்தாக ஒரு குற்றச்சாட்டு வந்தது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல, அரசிடம் முறையாக ‘இ – பாஸ்’ வாங்க வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரம் உள்ளிட்டவைக்கு மட்டுமே, இ – பாஸ் வழங்கப்படுகிறது.

நடிகர் ரஜினி கடந்த புதன்கிழமை, அவரது பண்ணை வீடு உள்ள கேளம்பாக்கத்திற்கு, மருத்துவத்திற்காக செல்வதாக கூறி இ – பாஸ் பெற்று சென்றதாக கூறப்படுகிறது . இது சர்ச்சையை கிளப்பியது.

அபராதம்

மேலும் கடந்த 20-ந் தேதி, கேளம்பாக்கம் செல்லும் போது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக, ரஜினிக்கு போலீசார் அபராதம் விதித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. சென்னை மாநகரபோலீஸ் எல்லை பகுதியை கடந்து, செங்கல்பட்டு போலீஸ் எல்லை பகுதியில் நுழைந்தபோது, சீட் பெல்ட் அணியாமல், கார் ஓட்டிய அவருக்கு, தாழம்பூர் போலீசார் அபராதம் விதித்துஉள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மீண்டும் இ – பாஸ் கேட்டு விண்ணப்பித்த போது அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதாவது அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கும் போது, அவருக்கு தாழம்பூர் போலீசார் அபராதம் விதித்துள்ளதும், அந்த அபராத தொகையை, அவர் செலுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது. அதனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உடனடியாக, அவர் அந்த அபராதத்தை செலுத்திய பின், அவருக்கு, இ – பாஸ் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.