ஒரே நேரத்தில் இரண்டு நடிகர்களை காதலிக்கும் நடிகை
1 min read
2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதன் பிறகு தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
ஹிந்தியிலும் இங்கிலீஷ் விங்கிலீஷ் எனும் படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் 2012 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் படத்தின் மூலம் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. இருந்தாலும் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியாமல் தடுமாறி வருகிறார். ஆனால் அவ்வப்போது ப்ரியா ஆனந்த் பற்றி வதந்திகள் அதிகமாக கோலிவுட் வட்டாரங்களில் பரப்பப்படும்.
அந்த வகையில் ஒரே நேரத்தில் இரண்டு நடிகர்களை காதலித்துக் கொண்டிருப்பதாக ப்ரியா ஆனந்தைப் பற்றிய செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் அதர்வா மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரையும் பிரியா ஆனந்த் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலித்து வருவதாக கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கூட துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கும் ப்ரியா ஆனந்துக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் சினிமாவில் இருந்தால் இதெல்லாம் சகஜம் தான் என கூலாக பதில் சொல்லியுள்ளார் பிரியா ஆனந்த். இருந்தாலும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என கோலிவுட்டில் நோண்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.