June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

காங். இடைக்கால தலைவராக சோனியா நீடிப்பு

1 min read
Sonia Gandhi Cong. Intermediate Continuing Extension

10-9-2020
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சோனியா காந்தி

ராஜீவ் காந்தி இறந்தபின்னர் சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றார். இதனை அடுத்து அவரது மகன் தலைவரானார்.
கடந்த நாராளுமன்ற (2019 ஆண்டு நடந்த) தேர்தலில் காங்கிரஸ கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து தலைவராக இருக்கும்படி கட்சியின் முன்னணி தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் ஏற்க வில்லை.

இதனால் சோனியா காந்தி தற்காலிகமாக தலைவராக நியமிக்கப்பட்டார். அதாவது அவர் ஆகஸ்டு 10-ந் தேதி வரை தலைவராக இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

நீடிப்பு

சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவி இன்றுடன்( திங்கட்கிழமை) முடிவடைகிறது.
இந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியாவின் இடைக்கால தலைவர் பதவிக்காலம் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி காலியாகிறது என அர்த்தம் அல்ல. புதிய தலைவரை தேர்வு செய்யும் வழிமுறைகள் சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். விரைவில் அப்பணிகள் முடிவடையும். அதுவரை சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிப்பார்.

இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *