June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பையில் கள்ளக்காதலியை கொன்ற முன்னாள் எஸ்ஐ -பரபரப்பு வாக்குமூலம்

1 min read

சுப்புலட்சுமி

12.8.2020

Ex-SI-confessional confession that killed his girlfriend in Ambai

நெல்லை மாவட்டம், அம்பை, வேலாயுத நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (35). இவர் கடந்த 8ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. அம்பை போலீசார் நடத்திய விசாரணையில் அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த மாஜி எஸ்எஸ்ஐ நடராஜன் (62) என்பவர், சுப்புலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்:

எனக்கும், சுப்புலட்சுமிக்கும் ஆரம்பத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடையவில் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் வேலாயுதநகரில் வசித்து வந்தோம். நான் என்னுடைய வீட்டுக்கும் சென்று வந்தேன். நான் வராத நாட்களில் சுப்புலட்சுமி பிற ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். மேலும் அவருக்கு மதுப்பழக்கமும் இருந்தது.

பல ஆண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததை நான் கண்டித்தேன். இதனால் அவருக்கும், எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 8ம்தேதி வழக்கம் போல் அவருடைய வீட்டுக்கு சென்ற போது அவர் மது அருந்தியிருந்தார். அப்போது மற்ற ஆண்களுடன் பேசக் கூடாது என்று கூறினேன். ஆனால் அவர் அதைக் கேட்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளை மாற்றிப் பிடித்து அடித்தேன். இதில் மயக்கமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார். போலீசுக்கு பயந்து நான் தலைமறைவானேன். ஆனால்  என்னை போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *