இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 2 பேர் தூக்கிலிடப்பட்டனர்
1 min read
Two people were executed in Iran for spying for Israel.
4/8/2026
இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ அமைப்பிற்கு நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு மையங்கள் குறித்த ரகசிய தகவல்களை வழங்கியதாகக் ஒமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சப்வாத் ஆகிய இரண்டு ஈரானிய குடிமகன்கள் ஈரான் அரசால் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற போரின் போதும், சமீபத்திய மோதல்களின் போதும் ஈரானிய ராணுவ முகாங்களின் வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உதவியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனைகள் வழங்கப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் ஈரானில் 50க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.