June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்?

1 min read


Hindi actor Sanjay Dutt has cancer?

12-8-2020
இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு லேசான புற்று நோய் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த 9-ம் தேதி லேசான நெஞ்சு வலியுடன் கடும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனே அவர் மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது ரசிகர்கள் வேதனை அடைந்தனர். அவர்கள் சஞ்சய் தத் பூரண நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

புற்று நோய்

இந்த நிலையில், சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சஞ்சய் தத்தின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறும்போது, “சஞ்சய் தத்திற்கு வந்துள்ள புற்று நோய் குணப்படுத்தக் கூடியதுதான். எனினும், கடுமையான மருத்துவ சிகிச்சை ஆகும். எனவே, அவர் உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என்று தெரிவித்தன.

மீண்டும் வருவேன்

முன்னதாக சஞ்சய்தத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், “நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனது நலவிரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்” என்று தெரிவித்து இருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.