June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கனிமொழியிடம் “நீங்கள் இந்தியரா” என்று கேட்கவில்லை; பாதுகாப்பு அதிகாரி மறுப்பு

1 min read
Kanimozhi was not asked "Are you Indian?" Security Officer Denial

13-8-2020
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.யிடம் நீங்கள் இந்தியரா என்று பாதுகாப்பு பெண் அதிகாரி கேட்க வில்லை என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்.

கனிமொழி எம்.பி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி.யான கனிமொழி, தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “சென்னை விமான நிலையத்தில், இந்தியில் பேசிய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரியிடம், இந்தி தெரியாது என கூறினேன்; தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தேன். அதற்கு, நீங்கள் இந்தியரா என, அவர் கேள்வி எழுப்பினார்.’இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து நடைமுறையில் உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிறப்பியது. இதனை அடுத்து சென்னை விமான நிலையில் பாகாப்பு பணியில் தமிழ் தெரிந்த அதிகாரிகள் ஊழியர்கள் நியமிக்கப்படும் என்று கூறப்பட்டது.

விசாரணை

இந்த நிலையில் கனிமொழி குற்றச்சாட்டு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெண் அதிகாரியிடம் நடத்திய விசாரணையின் போது, அவர், கனிமொழியிடம், நீங்கள் இந்தியரா என்ற கேள்வியை கேட்கவில்லை என்றும், இந்தியும் இந்திய அல்லது அதிகாரப்பூர்வ மொழி தானே என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பின், விமான நிலையங்களில், உள்ளூர் மொழி தெரிந்த அதிகாரிகளை, அதிக எண்ணிக்கையில் நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *