கொரோனா நோயாளிகளுக்காக பிளாஸ்மா தானம் செய்ய தயாராகும் ராஜமவுலி
1 min read
Rajamavuli prepares to donate plasma to corona patients
13-8-2020
கொரோனா நோயாளிகளுக்காக பிளாஸ்மா தானம் செய்ய இயக்குனர் ராஜமவுலி தயாராகி வருகிறார்.
பிளாஸ்மா
கொரோனா பாதிக்கப்பட்டு குணமானவர்கள் ரத்தத்தில் கொரோனா எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். அவர்கள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு அபாயக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு செலுத்தினால் அவர்கள் குணமாகிவிடுவார்கள். எனவே கொரோனா பாதிக்கப்பட்டு குணமானவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று அரசு சார்பில் வற்புறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் ராஜமவுலி தற்போது பிளாஸ்மா தானம் செய்ய தயராகி வருகிறார்.
இவர் பாகுபலி, நான் ஈ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார். இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். தற்போது கொரேனா ஊரடங்கால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
கொரோனா
இந்த நிலையில் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார். 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் அவர் குணமானார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது.
இதனை அடுத்து ராஜமவுலி மற்ற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய தயாராகி வருகிறார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இரண்டு வார தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். அதன்பின் பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா? என்பதைப் பார்க்க மருத்துவர் எங்களை மூன்று வாரங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.