நடிகை நிக்கி கல்யாணிக்கு கொரோனா
1 min read
actress Nikki Kalyani affected for corona
14-8-2020
நடிககை நிக்கி கல்யாணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , கலகலப்பு – 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்துள்ளது. உடல் பரிசோதனை மேற்கொண்டதில் கொரானா அறிகுறி இருந்துள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில் பக்கத்தில் , “கடந்த வாரம் எனக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நான், தர்போது வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். எனது வருகைக்காக காத்திருந்த நெருங்கிய நண்பர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்கள், தொடர்ச்சியாக ஆதரவளித்த சென்னை மாநகராட்சி ஆணையத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு பதிவிட்டார்.
தமிழக திரையுலகில் நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் ராஜமவுலி போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த வரிசையில் இப்போது நடிகை நிக்கி கல்ராணியும் சேர்ந்துள்ளார்.