எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெறும் வார்டில் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்பு
1 min read
SB Broadcast of songs sung by him in the ward where Balasubramaniam is receiving treatment

17-8-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெறும் வார்டில் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. ஆனால் நேற்று அவர் மயக்க நிலையில் இருந்த மீண்டார். அவ்வப்போது கண்களை திறந்து பார்த்தார்.
தொடர்ந்து அவருக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.
பாடல் ஒலிபரப்பு
இசையால் நோய் விரைவில் குணம் ஆகும் என்று சொல்வார்கள். அதுவும் இசை ஞானம் உள்ளவர்களக்கு அது மிகுந்த பலனை கொடுக்கும். எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
6-வது மாடியில் அவர் சிகிச்சை பெறும் அறையில் ஸ்பீக்கர்கள் அமைத்து பாடல்கள் மெல்லிய இசையில் ஒலிபரப்புகிறார்கள்.
பாடல்களை கேட்பதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைவார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.