நீட் தேர்வுக்கு பயந்து கோவை மாணவி தற்கொலை
1 min read
Coimbatore Girl commits suicide for fear of NEET exam
18-8-2020
நீட் தேர்வுக்கு பயந்து கோவை மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ(1வயது9). மருத்துவ படிப்பில் சேர விரும்பிய அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் அவர் போதிய மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு அவரால் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிகை்கவில்லை.
எனவே இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்த ஆண்டு கொரோனா .ஊரடங்கு காரணமாக நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு அதை ஏற்க மறுத்துவிட்டது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று( செவ்வாய்க்கிழமை) மாணவி சுபஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.