எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சற்று முன்னேற்றம்
1 min read
SP Balasubramaniam’s health has improved slightly
23-8-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(வயது 75) கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு, மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் ‘ஆக்ஸிஜன்’ அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கிவருகிறது. ஆனாலும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது உடல்நிலையில், கடந்த சில நாட்களைக் காட்டிலும் நேற்று( சனிக்கிழமை) சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.