தே.மு.தி.க. தனித்துபோட்டியிட தொண்டர்கள் விருப்பம்; பிரேமலதா பேட்டி
1 min read
DMDK. Volunteers’ option to stand alone; Interview with Premalatha
25-8-2020
தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதையே தொண்டர்கள் விரும்புவதாக கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறினார்.
பிறந்தநாள்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கட்சியினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அவருக்கு அரசியல் தலைவர்கள்,
நடிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து
வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர்
ஓ. பன்னீர் செல்வம், தெலுங்கானா
ஆளுவர் தமிழிசை உள்ளிட்டோர்
வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர் குடும்பத்துடன்
செல்பி எடுத்து பிறந்த நாள் செல்வி என
சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து கட்சியின் பொருளாதாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை சீட் கிடைக்காதது வருத்தமளிக்கிறதா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பிரேமலதா கூறியதாவது:-
கூட்டணியா?
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். இப்போதைக்கு அ.தி.மு.க. உடனான கூட்டணி தொடர்கிறது. தேர்தலின்போது முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் நெருங்கும்போது செயற்குழு, பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும். தேமுதிகவிற்கு கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும்.
தனித்துப் போட்டி
விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்கவேண்டும் என்பதே தே.மு.தி.க. தொண்டர்களின் எண்ணம். தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது.
டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.