June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை

1 min read
Seithi Saral featured Image


Murder involved in robbery cases

25-8-2020

சென்னை ஐசிஎப் பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை வழக்கு

சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கருணாகரன் (வயது 35). இவர் இன்று அதே பகுதியில் தலையில் அரிவாளால் வெட்டியும், முகத்தில் கல்லை போட்டும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐசிஎப் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் ஐசிஎப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *