May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் 5 மாதங்களுக்குப்பிறகு திறப்பு

1 min read


Thiruvananthapuram Padmanabhasamy temple opens after 5 months

26-8-2020

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் 5 மாதங்களுக்குப்பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.

பத்மநாபசாமி கோவில்

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டது. அன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் பக்தர்கள் அனுமதி இன்றி நித்திய பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன.
தொடர்ந்து அவ்வப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கோவில்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் பொதுமக்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் தீபாரதனை முடியும் வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன் லைன்

பக்தர்கள் வழிபாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு விண்ணப்பத்தின் நகலையும் ஆதார் கார்டையும் கோவிலுக்கு வரும் போது கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் 35 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளைக்கு 665 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க உதவி செய்ய வேண்டும் இவ்வாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு கோவில் பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.