May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

விஜய்யின் மாஸ்டர் படத்தை விடாமல் துரத்தும் அமேசான் -ஓடிடியில் வெளியாக வாய்ப்பு

1 min read

27.8.2020

Vijay’s master movie is likely to be released on Amazon

விஜய் இதுவரை நடித்த 63 படங்களைவிட மாஸ்டர் படத்திற்குத்தான் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் கைதி என்ற வெற்றி படத்தை கொடுத்தவுடனே விஜய்யுடன் கைகோர்த்தது தான்.

ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவி வரும் நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்ட காரணத்தினால் பட வெளியீடு தள்ளிச் சென்றது. படம் ரெடியாகி ஐந்து மாதங்களுக்கு மேலான நிலையில் மாஸ்டர் படக்குழு சோகத்தில் இருக்கிறது.

ஏற்கனவே ரசிகர்கள் படம் எப்போது என இணையதளங்களில் படக்குழுவினரை கேட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தை எப்போது வெளியிடுவது என தெரியாமல் தயாரிப்பாளர்களே குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக மொத்த தியேட்டர் ஓனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது OTT நிறுவனம். படத்தின் பட்ஜெட்டை விட ஒரு மடங்கு அதிகமாக பணம் கொடுத்து படங்களை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் OTTயை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர்.

பெரிய நடிகர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என நம்பிக்கொண்டிருந்த தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சூர்யா தனது சூரரைப்போற்று படத்தைக் கொடுத்ததும் அவர்களுக்கு இன்னும் பயம் அதிகமாகி விட்டது.

சூரரைப் போற்று படத்தை வளைத்த அமேசான் நிறுவனம் எப்படியாவது மாஸ்டர் படத்தை வாங்கி விட வேண்டும் என விடாமல் விலை பேசி வருகிறதாம். கிட்டத்தட்ட ₹100 முதல் 120 கோடி வரை பணம் கொடுக்க ரெடியாக உள்ளதாம் அமேசான் நிறுவனம்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் தியேட்டரில்தான் வெளியிடுவேன் என தயாரிப்பாளர் வெளியில் கூறிக் கொண்டிருந்தாலும் படம் தியேட்டரில் வெளியாகி பழைய மாதிரி வசூல் குவிக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு பெரிய விலை வைக்காத அமேசான் நிறுவனம் மாஸ்டர் படத்திற்கு வைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.