June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு?- ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு

1 min read

Chennai Koyampedu market reopens? – O. Panneer selvam visit

27-8-2020

கோயம்பேடு மார்க்கெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். எனவே அது மீண்டும் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கோயம்பேடு

சென்னையில் கொரோனா தொடக்கத்தில் விரைவாக பரவியதற்கு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் என்று கூறப்பட்டது. அங்கு சென்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிகையுடன் இருக்கவில்லை என்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனால் அந்த மார்க்கெட் மூடப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாரிகள் கோரிக்கை வைக்கிறார்கள். அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற தயார் என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகளிடம் வியாபாரிகள் உறுதிமொழி கொடுத்துள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு

இந்த நிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகளையும் துரிதப்படுத்த அதிகாரிகள் குழு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது பற்றி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து மூடப்பட்டுள்ள மார்க்கெட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கோயம்பேடு சந்தை தற்போது மூடப்பட்டிருந்தாலும் தினமும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்க்கெட் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணியும் நடந்து வந்தன. இதனால் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகளிம் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *