May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

அர்ஜுனா, கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை அதிகரிப்பு

1 min read

Prize increase for Arjuna, Gale Ratna award

29-8-2020

அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

அதிகரிப்பு

மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம்.
அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.