கடகம் /ராகு-பெயர்ச்சி பலன்கள்/ காழியூர் நாராயணன்
1 min readRagu-kethu peyarchi palan / Cancer / Kaliyur Narayanan
1-9-2020
சாமர்த்தியமாக பேசும் வல்லமை படைத்த கடக ராசி அன்பர்களே! குழந்தைகளிடம் நீங்கள் காட்டும் அன்பு அபரீதமானதாக இருக்கும். தாய் தந்தையரிடமும் நல்ல அன்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மிதுன ராசியில் இருந்ததால் பண இழப்பையும், சிற்சில துயரசம்பவத்தையும் சந்தித்து இருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான ரிஷபத்திற்கு செல்வது மிகச்சிறப்பான இடம் ஆகும். அவரால் இதுவரை இருந்து வந்த பிரச்சினை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.
கேது இதுவரை 6-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். அவர் இப்போது 5-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம்.ஆனால் இதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது .சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிலவும்
கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் காரிய அனுகூலம் ஏற்படும். பொருளாதார வளம் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார்.பண வரவு இருக்கும்.
மற்றகிரகங்களின் நிலை
சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். நல்ல பணப்புழக்கத்தை கொடுப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். மேலும் சனியின் 10-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். இந்த நிலையில் அவர் 2020 டிசம்பர் 26-ந் தேதி 7-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். அவர் உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத் துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது.அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 7-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். மற்றும் அவரது 5-ம் இடத்துபார்வையும் சாதகமாக காணப்படுகிறது. இதனால் பொருளாதார வளம் மேம்படும். அவர் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்காது. அவர் 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்- விரோதத்தை உருவாக்குவார். இதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது 7-ம் இடத்துபார்வை சாதகமாக காணப் படுகிறது. இதனால் மந்த நிலை மாறும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பானஇடம். அப்போது குருவால் உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்திஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
இனி விரிவான பலனை காணலாம்.
2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
பணப் புழக்கம் இருக்கும். மதிப்பு,மரியாதை கூடும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.
உத்தியோகம் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்குபுதிய பதவி தேடிவரும். சகஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். தனியார் துறையில்வேலைபார்ப்பவர்களுக்கு வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும்.இடமாற்ற பீதி தொடரும்.நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்- கும்.விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
வியாபாரத்தில்அதிக வருமானத்தை காணலாம். புதியவியாபாரம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம்.
அரசியல்வாதிகள்,சமூகநலசேவகர்களுக்கு பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும்,மனதில் ஏற்பட்ட சோர்வும் நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு மறையும்.புகழ், பாராட்டு வரும். மாணவர்கள்அதிக கவனம்செலுத்தி படிக்க வேண்டியது இருக்கும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குருவால் போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு உண்டு. விவசாயம்: மஞ்சள்,கரும்பு,எள், உளுந்து,பயறுவகை, பனைத்தொழில் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.சகோதரர்களால் உதவி கிடைக்கும்.பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். அவர்களால் பெருமை கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையைஅறிந்து சரணடையும் நிலை வரலாம்.உடல்நலம் சிறப்படையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.
2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
பெண்களால் அனுகூலம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.
உத்தியோகம் சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது.
வியாபாரம் சிறப்படையும். நஷ்டம் இருக்காது. கணினித் தொழில், பத்திரிகை, இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது. மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவியும்,பணமும் கிடைக்கும். பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை கலைஞர்-களுக்கு காரியத்தடை, பொருள்நஷ்டம் ஏற்படலாம். மாணவர்கள் சிறப்பைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை மூலம் பணப்புழக்கம் இருக்கும்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.ழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திருமணம் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
2021 டிசம்பர் முதல்
பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். உறவினாகள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும்.பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்கவேண்டாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சற்றுகவனம் செலுத்த வேண்டும்.விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரனிடம் சமரமாக போகலாம் என்ற நிலையை கையாளலாம். பெண்கள் திருப்திகரமாக வாழலாம். குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டிய திருக்கும். உடல்நலம் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும். சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வழிபடுங்கள்.காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.