October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

சிம்மம் / ராகு-பெயர்ச்சி பலன்கள்/ காழியூர் நாராயணன்

1 min read

Ragu-kethu peyarchi palan / Leo / Kaliyur Narayanan
1-9-2020
பெரிய மனிதர்களின் நட்பும், சுகவாசமும் பெற்று விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடமிருந்து தனித்துவத்தை பெற்றிருப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் உங்களை முன்னிலைப்படுத்தும் இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட உங்களுக்கு இந்த இந்த ராகு-கேது பெயர்ச்சி சுமாரான நிலை. இதுவரை11-ம் இடமான மிதுன ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் கொடுத்து வந்த ராகு10-ம் இடமான ரிஷபத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள்இழப்பையும், சிறுசிறுஉடல் உபாதைகளையும் கொடுப்பார்.
கேது இதுவரை தனுசு ராசியில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் உடல் நலப்பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்சினை- யையும் தந்து இருக்கலாம். இப்போது கேது 4-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். வயிறு பிரச்சினைவரும்.
இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான மகரத்தில் விழுகிறது. .இதன்மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
நகைஆபரணங்கள் வாங்கலாம்
கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்உங்களுக்குஅபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.


மற்றகிரகங்களின் நிலை
சனிபகவான் தற்போது 5-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும். அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். இந்தநிலையில்அவர் 2020 டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்.மேலும்சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும்.அதன்மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார்.இது சிறப்பான நிலை.மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி -களை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் -பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் கிடைக்கும். ஆனால் அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சிஅடைந்து 6-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால் அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.அவர் மனஉளைச்சலை தரலாம். உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம். இந்த காலத்தில் அவரின் 9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளது. இதனால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றி காணலாம். அவர் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரைஅதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். பிறகு2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சிஅடைந்து 7-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எண்ணற்ற பலவசதிகள் கிடைக்கும். அதன் பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார்.


2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
குடும்பத்தில் சீரான வசதி இருக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்கள் வகையில் அன்னியோனியம் நிலவும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும்.எனவே வீண் விவாதங் களை தவிர்க்கவும்.அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவிஉயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு கடந்த வேலைப்பளுஅதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். சிலர்வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.அவர்கள் குருப்பிரீத்திசெய்தால் சிறப்பான பலனை பெறலாம்.
வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும்.சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை. யாரையும் நம்பி பண -த்தை ஒப்படைக்க வேண்டாம். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு தொழில் வளர்முகமாக இருக்கும். எதிர்பாராத வகையில் பணம் சிடைக்கும். எதிரிகளின் சதியை சனிபகவானால் முறியடிப்பீர்கள்.
கலைஞர்கள் நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக் -கும். மாணவர்கள் நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.விவசாயம் பாசிபயறு, எள்,துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.பெண்கள் திருப்திகரமாக வாழலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும் நவம்பர் 11-ந் தேதிக்கு பிறகு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபடவேண்டிய திருக்கும். உடல்நலம் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.


2021 ஜனவரி முதல் 2021 நவம்பர் வரை
சனிபகவானால் எடுத்தகாரியம் வெற்றி அடையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடலாம்.
உத்தியோகம் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை மதிப்பெண்கள் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனை பெறலாம். அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் திருப்திகரமாக வாழலாம்.குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டிய திருக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர்13-ந் தேதி வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சிற்சில உபாதைகள் வரலாம்.


2021 டிசம்பர் முதல்
உங்கள் ஆற்றல் மேம்படும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அரு- ளும் கிடைக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உத்தியோத்தில் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும்.மேல் அதிகரரிகளுடன் அனுசரித்து போகவும்.
வியாபாரிகளுக்கு தொழில் வளர்முகமாக இருக்கும்.பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும்.
கலைஞர்கள்சிறப்பான பலனைக் காண்பர்.புகழ்,பாராட்டு போன்றவை வரும்.நல்ல பணப்புழக்கமும் இருக்கும். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக்காணலாம். பொது மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்கள்:முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும்.
விவசாயம் வருமானத்திற்கு குறை இருக்காது.நெல்,கோதுமை, பழவகை- கள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம். புதியசொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும்.
பெண்கள்மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குதூகலம் ஏற்படும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். சகோதரர்களால் உதவி கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பா இருக்கும்.வங்கிகடன் எளிதாக கிடைக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகள் நலம் மேம்படும்.
பரிகாரம்- பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம்.ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.