தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
1 min readDischarge increase in Tamil Nadu today than corona effect
1-9-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இன்று மட்டும் 6,031 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை )மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 5,928 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 5,897 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 31 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 150 ஆய்வகங்களில் ( 75,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,62,223. பெண்களின் எண்ணிக்கை 1,71,717. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,031 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உள்ளது.
கொரோனாவுக்கு இன்று மட்டும் 96 பேர் இறந்துள்ளனர். இவர்களில்31 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 65 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும்அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7,418 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,379 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்ட வாரியாக…
இன்று கொரேனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ( மொத்த பாதிப்பு விவரம் அடைப்பு குறிக்குள்) மாவட்ட வாரியாக வருமாறு:-
சென்னை-1,084 ( 1,36,697 )
செங்கல்பட்டு-384 ( 26509 )
திருவள்ளூர்-296 ( 25,051 )
காஞ்சிபுரம்- 191 ( 17,526 )
கோவை -581 ( 16,075 )
சேலம்-335 ( 11,412 )
கடலூர்-286 ( 11,737 )
கள்ளக்குறிச்சி-209 ( 6,288 )
ராணிப்பேட்டை-182 ( 10,702 )
விழுப்புரம்-166 ( 7,595 )
திருவண்ணாமலை-154 ( 10,613 )
கன்னியாகுமரி-153 ( 9,710 )
திருநெல்வேலி-152 ( 6,669 )
வேலூர்-136 ( 10,919 )
தஞ்சாவூர்-132 ( 6,737 )
மதுரை-128 ( 14,279 )
திண்டுக்கல்-111 ( 6,669 )
திருவாரூர்-99 ( 3,686 )
திருச்சி-98 ( 7,575 )
புதுக்கோட்டை-95 ( 6,167 )
ஈரோடு- 90 ( 3,264 )
திருப்பூர்-87 ( 2,812 )
நாகப்பட்டினம்-85 ( 2774 )
நாமக்கல்-74 ( 2,220 )
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5465 ஆக அதிகரித்தது. இன்று மட்டும் 81 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை மொத்தம் 4425 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 936 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை104 ஆக உள்ளது/
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 9688 ஆக அதிகரித்தது.
இன்று மட்டம் இந்த மாவட்டத்தில் 149 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 8265 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 1248 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11465 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் இந்த மாவட்டத்தில் 97 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை இந்த மாவட்டத்தில் மொத்தம் 10478 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மொத்தம் 884 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் கொனோவுக்கு இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 113 ஆக உள்ளது.