தமிழக சட்டசபை கூட்டம் 14-ந் தேதி கலைவாணர் அரங்கில் நடக்கிறது
1 min read
The Tamil Nadu Assembly meeting will be held on the 14th at the Kalaivanar Arangam
1-9-2020
தமிழக சட்டசபைக் கூட்டம் வருகிற 14-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் மாதம் 23-ந் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
சட்டசபை கூட்டம் 6 மாத இடைவெளியில் கண்டிப்பாக கூட்ட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும்.
சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திலும் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் இடம் இல்லை. இதனால் அங்கு அனைவருமே அமர இடமில்லாமல் போய்விடும்.
கலைவாணர் அரங்கம்
எனவே சட்டசபை கூட்டத்தொடரை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குரிய இடம் எது என்று ஆய்வு செய்தனர்.
இதனை அடுத்து தொடர்ந்து சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கடந்த 22-ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்பின் சட்டசபை கூட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வருகிற 14-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டம் தொடங்கும் முன்பு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.