September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகரின் மகனுடன் இரவில் சுற்றும் யாஷிகா ஆனந்த்

1 min read

1/9/2020

Yashika Anand embracing the actor’s son

கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். தன்னுடைய உடம்பை அனைவரும் பார்க்கும்படி புகைப்படம் வெளியிடுவது இவருக்கு கைவந்த கலை.அதுமட்டுமில்லாமல் படங்களில் கூட இவரது காட்சிகள் மிகவும் மோசமான காட்சிகளாகவே இருந்து வருகிறது. பார்ப்பவர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெளிய வைக்கும் திறமை வாய்ந்தவர் யாஷிகா.

இப்படிப்பட்ட யாஷிகா பிரபல நடிகரின் மகனை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. காதலிப்பதை விட இரவு நேரங்களில் அதிகமாக இருவரும் வெளியில் சுற்றுவதால் அந்த நடிகரின் அப்பாவான பிரபல நடிகர் மிகவும் வருத்தப் படுகிறாராம்.

தமிழ் சினிமாவில் தாய்மாமன் கதாபாத்திரம் என்றால் அது இவருக்குத் தான் என எழுதி வைக்கப்பட்டவர் தம்பி ராமையா. எப்படியாவது சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்து விடாதா என காத்துக் கொண்டிருந்தவருக்கு அல்வா மாதிரி கிடைத்தது பிரபு சாலமனின் படங்கள்.

தொடர்ந்து பிரபுசாலமன் படங்களில் இடம் பிடித்து தன்னுடைய காமெடி திறமையையும் குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் தனது மகன் உமாபதியை வைத்து மணியார் குடும்பம் எனும் படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வந்த யாஷிகா ஒட்டுமொத்தமாக தம்பி ராமையாவின் குடும்பத்தில் புகுந்து ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இருவருக்குள்ளும் நட்பு முற்றி விட்டதால் இவர்களை எப்படி பிரிப்பது என பலத்த யோசனையில் இருக்கிறாராம் தம்பி ராமையா.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.