பிரணாப் முகர்ஜி உடல் தகனம்
1 min readCremation of Pranab Mukherjee
1-9-2020
மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம் நடந்தது.
பிரணாப் முகர்ஜி
கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை ஜனாதிபதியாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி (வயது 84). மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், பதவி ஓய்வுக்குப்பின் டெல்லியில் வசித்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 9-ந்தேதி தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. எனவே மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ .ஆஸ்பத்திிரயில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம், பிரணாப்பின் மூளையில் இருந்த ரத்தக்கட்டி அகற்றப்பட்டது.
ஆனால் பின்னர் நடந்த பரிசோதனையில் அவருக்க கொரோனா இருப்பது கண்டறிப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்தது. நேற்று( திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பிரணாப் முகர்ஜியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இன்று காலை 9.15 முதல் 10.15 வரை முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தகனம்
கொரோனா வழிகாட்டுதல் நடைமுறையில் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடல் ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் லோதி மின் மயானத்தில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.