பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதல், 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்
1 min readUniversities can conduct first and second year semester examinations if desired
3-8-2020
பல்கலைக்கழங்கள் விரும்பினால் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
இறுதி ஆண்டு செமஸ்டர்
கொரோனா ஊரடங்கால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இதனால் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. மற்ற செமஸ்டர் தேர்வுகளை நடத்த தேவை இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்வை நடத்த அனுமதி வழங்கியது. மேலும் தேர்வை எழுதாமல் பட்டங்களை வழங்கக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.
இதனையடுத்து, வரும் 30ம் தேதிக்குள் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைகழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழங்கள் விரும்பினால்…
இந்த நிலையில், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு இன்னொரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பல்கலைகழகங்கள் விரும்பினால், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம். யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என தெரிவித்துள்ளது.