ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்
1 min read
India tops in oneday corona impact
3-8-2020
உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடம் இருந்தாலும் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கு கொரோன இன்னும் கட்டுக்குள் வரவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 8.66 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் மிக அதிகபட்சமாக 62.90 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1.89 லட்சம் பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். நேற்று( புதன்கிழமை) ஒரே நாளில் மட்டும் அந்த நாட்டில் 1,021 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடு பிரேசில். அங்கு இதுவரை 40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 1.24 லட்சம் பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1,245 பேர் இறந்துள்ளனர்.
இந்தியா
இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38.48 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 29.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 83,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,045 பேர் பலியாகி உள்ளனர்.
தொற்று பரவத் தொடங்கிய நாளில் இருந்து, இந்தியா மிக அதிகபட்ச கொரோனா பாதிப்பை நேற்று பதிவு செய்துள்ளது.
முதலிடம்
மொத்த கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஒரு நாள் பாதிப்பில் கடந்த சில நாட்களாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. மொத்த பாதிப்பு மட்டுமின்ற கொரோனா இறப்பிலும் இந்தியா 3வது இடத்தில் இருப்பது ஆறுதலான விசயம்.