June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த முயற்சி

1 min read

Attempt to marry a 17-year-old girl near Surandai

6-9-2020

சுரண்டை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த முயற்சி நடந்தத. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.

திருமணம் நடத்த முயற்சி

வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகே பலபத்திர ராமபுரம் கிராமத்தை அடுத்த மாவிலியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நேற்று காலை அவர்களது இல்லத்தில் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

நிறுத்தம்

உடனே வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி, வருவாய் ஆய்வாளர் முத்தையா, கிராம நிர்வாக அலுவலர் சங்கர நாராயணன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர், சின்ன கோவிலாங்குளம் போலீசார் மாவிலியூத்து கிராமத்திற்கு சென்று மணமக்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதில் மணப்பெண் 17 வயதே ஆன மைனர் என்பது விசாரணையில் உறுதியானது. இதைத்தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து திருமணத்தை தள்ளி வைக்க அறிவுரை வழங்கினர். இதன் மூலம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *