May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவன் கோவில்களில் 6 மாதத்திற்கு பிறகு பிரதோஷ நிகழ்ச்சி

1 min read

Pradosa Pooja after 6 months at Shiva temples

15-9-2020

சிவன் கோவில்களில் 6 மாதத்திற்கு பிறகு இன்று பிரதோஷம் பக்தர்கள் சூழ நடந்தது.

பிரதோஷம்

சிவன்கோவில்களில் மாதத்திற்கு இரண்டு முறை வரும் பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் சிவன் சன்னிதானத்திற்கு நேர் எதிரே உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு நந்தியையும் சிவபெருமானையும் வணங்குவார்கள்.

கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 24 -ந் தேதி பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முறைபடியான பூஜைகள் மட்டும் நடந்தது. ஊரடங்கு தளர்வுகள் சிறிய கோவில்களுக்கு மட்டும் கடந்த மாதம வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் பெரிய கோவில்களுக்கும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

6 மாதங்களுக்குப் பிறகு

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் இன்று முதன் முதலாக பிரதோஷம் வந்தது. இதை யொட்டி எல்லா சிவன் கோவில்களிலம் நந்திக்கு அபிஷேகம் பூஜைகள் செய்து பிரதோஷம் நடந்தது. ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

தஞ்சை பெரிய கோவிலிலும் இன்று பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவில் நுழைவு வாயிலில், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபிறகே, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும், சமூக இடைவெளியுடன் அமர்ந்து, தரிசனம் செய்தனர். பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஆறு மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சாமி கும்பிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.