June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பூனைக்கு நடந்த வளைகாப்பு

1 min read

Baby shower for cat

16-9-2020

தலை பிரசவத்திற்கு முன்பு பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படும். இந்த விழாவை நடத்த முடியாத ஏழைகளுக்கு அரசின் சமூக நலத்துறை மூலம் இலவசமாக வளைகாப்பு நடத்தப்படும்.

பூனைக்கு வலைதளத்தில்….

இந்த நிலையில் புதுவையில் ஆசையாக வளர்த்த பூனைக்கு வளைகாப்பு நடந்த நிகழ்ச்சி நடத்திய புதுவையில் நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி மூலக்குளம் பெரம்பை ரோட்டை சேர்ந்தவர் வசந்தா. இவர் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வீட்டில்வளர்த்து வருகிறார்.

அந்த பூனை கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த நிலையில் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் வளைகாப்பு ஒன்று நடப்பதை பார்த்த வசந்தாவின் பேரக்குழந்தைகள் அதேபோன்று ஒரு நிகழ்ச்சியை நம் வீட்டிலும் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இதனை அடுத்து கர்ப்பமாக இருக்கும் பூனைக்கு வளைகாப்பு நடத்த வசந்தா முடிவு செய்தார். அக்கம்பக்கத்தினரை அழைத்து பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.

வலைதளத்தில்…

பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதை போன்றே மாலை அணிவித்து வளையல் அணிவித்து திருஷ்டி சுற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே வளைகாப்பு நடத்தப்பட்ட பூனைக்கு 4 குட்டிகளை பிறந்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *