இந்தியாவில் ஒரே நாளில் 93,337 பேருக்கு கொரோனா
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2020/06/corona-1.jpg)
Corona for 93,337 people in one day in India
19-9-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 93,337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா நிலவரம் பற்றி தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் தகலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( சனிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 93,337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,08,015 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று மட்டும்1,247 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 85,619 பேர் இறந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 95, 880 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,12,552ல் இருந்து 42,08,432 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 10,13,964 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தற்போது கொரோனாவுக்கு உயிரிழப்பு 1.61 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 79.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.