June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

6-வதும் பெண் குழந்தையாக இருக்குமோ என்ற அச்சத்தில் கர்ப்பிணியின் வயிற்றை கீறிய கணவர் கைது

1 min read

Husband arrested for scratching pregnant woman’s abdomen for fear of having a 6th child

20/-9/2020-

ஐந்து பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் ஆறாவதாகவும் பெண் குழந்தை பிறக்குமோ என்ற அச்சத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவர் கைது செய்யப்பட்டார்.

5 பெண் குழந்தைகள்

உத்தரபிரதேச மாநிலம் படான் பகுதியை சேர்ந்தவர் பன்னலால் (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி அனிதா தேவை. இவர்களுக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் அனிதா தேவி மீண்டும் கர்ப்பம் ஆனார். தற்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

வாக்குவாதம்

தனக்கு எப்படியும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தார். ஆனாலும் 6-வது குழந்தையும் பெண்ணாக பிறந்து விடக்கூடாதே என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் மனைவியை கருக்கலைப்பு செய்யும்படி வற்புறுத்தினார். ஆனால் மனைவி கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிட்டார். மேலும் 6 மாத கர்ப்பம் என்பதால் கலைக்க இயலாது என்றும் கூறினார்.
இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையும் ஏற்பட்டது.

வயிற்று கிழித்தார்

நேற்றும் (சனிக்கிழமை) அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னலால் கூர்மையான ஆயுதத்தை எடுத்து மனைவியின் வயிற்றை கிழித்தார். மேலும் வயிற்றுக்குள் இருப்பது என்ன குழந்தை என்பதை காண முயற்சித்துள்ளார்.
கணவனின் செயலால் அனிதா தேவி கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு பரேலி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னலாலை கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *